சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், நோய் பாதிப்பின் நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிகிறார். வரும் 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பொதுமுடக்கம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து, ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post