ராஜிவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்களோடு முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தின் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது, தன்னலம் கருதாது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செலியர்களுக்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்புக்காக எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள், மற்றும் சிகிச்சையை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.
 

Exit mobile version