பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், வெளியூரில் உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாகவும், பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மூத்த அமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பள்ளிகள் திறப்பதற்கான தற்போதைய நிலை குறித்தும் கூட்டத்தில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.