கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version