கொரோனா குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.

ஓமனிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், செய்யப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சுற்றறிக்கை மூலம் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version