விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயத்தை பாதுகாக்க, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனிச்சட்டம் இயற்றப்படுமெனவும் முதலமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version