பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தமிழக மருத்துவக் காப்பீட்டு குறித்து பேசிய முதலமைச்சர்

தமிழகத்தில் ஒன்றரைக் கோடி குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுகாதாரத்துறை, தொழில்துறை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் நாடாளுமன்றத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு துறைசார் வல்லுநர்கள் ஆகியோரைச் சந்தித்தார். அப்போது, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒன்றரைக் கோடி குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version