சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை வரவேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், சமூக நீதியைக் காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்க தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.