தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க முதலமைச்சர் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லாதவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவைப்படும் நிலையில், 10 ஆயிரத்து 764 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version