சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க, ஊரடங்கை கடுமையாக்குவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மே 30ம் தேதி, 5-ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில், நாளை மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Discussion about this post