தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.

இதேபோல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வன்னியம்பட்டியில் 6 கோடியே 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். நெல்லை, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 29 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்ததுடன், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் 70 கோடியே 23 லட்ச ரூபாய் மதிப்பில் 3 சாலை மேம்பாலப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Exit mobile version