பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மானிய கோரிக்கைகளை தயார் செய்யும் பணியில் அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தன் வசமுள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை சார்ந்த கோரிக்கைகளை வரும் 15ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யவுள்ளார். நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம் அரசின் லட்சியத் திட்டம் என்று குறிப்பிட்டார். குடிமராமத்துப் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.