மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி அங்கே ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என , மத்திய அரசுக்கு  முதலமைச்சர்  பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு முதலமைச்சர்  பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,  தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன பகுதிகளில், எரிவாயு தேடி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளால் நிலவளம் பாதிக்கப்பட்டுவந்ததாக ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்.. மண் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு,  குடிநீர் தட்டுப்பாடு,  காற்றுமாசுபாடு, கடல்நீர் உட்புகுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு  பாதிப்புகள் ஏற்படுவதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.. அதோடு எரிவாயு குழாய்கள் அவ்வப்போது சேதமானதால், அதில் இருந்து வெளியேறிய வேதிப்பொருட்கள் பூமியையும், நீரையும் பாதித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.  ஹைட்ரோகார்பன் ஆய்வுகளால், டெல்டா பகுதிகளில் உள்ள தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா போன்ற பாரம்பரிய வழிபாட்டு இடங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ஆகவே பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் இனி ஹைட்ரோகார்பன் போன்ற  எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.. பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்திற்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க போதுமான நடவடிக்கைகளை  தமிழக அரசு மேற்கொள்ளும் எனவும், அதற்கு போதுமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்..   

Exit mobile version