கலைஞர்களின் வளர்ச்சிக்காக கலைப் பண்பாட்டுத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் ஜெயம்-2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர், கலைஞர்களின் வளர்ச்சிக்காக கலைப் பண்பாட்டுத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், நாட்டியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய துணை முதலமைச்சர் இசை,நாட்டியம் மட்டும் இல்லாமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.