தேசிய நெடுஞ்சாலையில் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலம்: முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சேலம் கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் 3 மேம்பால பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சேலம் கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 40 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற விழாவில், 3 மேம்பால பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version