செப்.8-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், வரும் செவ்வாய்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்கவும், மாநிலத்துக்குள் ரயில்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 8ம் தேதி தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப மருத்துவ வசதிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version