வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் இருவரும் கலந்து ஆலோசிக்கின்றனர்.

Exit mobile version