முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர், பத்திரிகையாளர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று கூறியுள்ளார். கடின உழைப்பாளியான அவர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.