விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள சாஸ்தாகோவில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணை முழு கொள்ளாளவை எட்டியுள்ளது. இதனையடுத்து, விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற் முதலமைச்சர், பாசனத்திற்காக இன்று முதல் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வரை 48 நாட்கள் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து அதிக மகசூல் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.