கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீரை திறக்க முதலமைச்சர் உத்தரவு

ஒசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் சுழற்சி முறையில் 150 நாட்களுக்கு தேவையான நீரை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீரை திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, சுழற்சி முறையில் இன்று முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை 150 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் 22 கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Exit mobile version