தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் 25 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடங்களைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கடலூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள், சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். வேலூர், நாகர்கோவில், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version