முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழனென்ற பெருமையோடு, தலைநிமிர்ந்து நில்லடா தரணியெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், அனைவருக்கும் தனது உளப்பூர்வமான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version