மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர்,துணை முதல்வர் பங்கேற்பு

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுடன் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் நாட்டு அதிபர்கள் உறுதி செய்துள்ளனர். நேபாளம், மொரிசியஸ் மற்றும் பூட்டான் பிரதமர்களும், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100-க்கும் அதிகமானோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதுதாய்லாந்து சார்பில் சிறப்பு தூதர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version