அரசியல் நோக்கோடு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் – கிரண் பேடி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, முதலமைச்சர் நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. ஆளுநர் மாளிகை முன்பு மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் கிரண்பேடி, அரசியல் நோக்கத்தோடு  முதலமைச்சர் நாராயணசாமி தர்ணாவில் ஈடுபடுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.  அவர் பிரச்னைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் வரவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

 

Exit mobile version