தேர்தல் பிரசாரத்திற்காக சேலம் சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று எடப்பாடி தொகுதியில் முதலமைச்சரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி சேலம் சென்ற துணை முதலமைச்சரை, முதலமைச்சர் தனியார் விடுதியில் சந்தித்தார். அப்போது தேர்தல் பணிகள், பிரசார வியூகங்கள் குறித்தும், 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் புறப்பட்டு சென்றார்.]