அரியலூரில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான நிறைவடைந்த 39 பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 26 கோடியே 52 லட்சம் மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 

அதைத்தொடர்ந்து, 129 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், குன்னம் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், மாவட்ட ஆட்சியர் ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version