மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்!

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தையும், செயலியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் இந்நிறுவனத்தின் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளமும், TNPFCL என்ற கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் துவக்கி வைத்தார். இப்புதிய வலைதளத்தின் மூலமாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள 8 ஆயிரம் பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் வழங்கினார். மேலும், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மின்துறை அமைச்சர் தங்கமணி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version