நோய் தொற்று பணியில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார் முதல்வர்!-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்கு பெறும் வகையில், பாரத் நெட் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் பகுதியில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு அமைச்சர் உதயகுமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா வைரஸ் காலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைகளை வெளியிடாமல், களத்தில் நின்று தடுப்பு பணிகளை வழிநடத்தி வருவதாக கூறினார். பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என விளக்கம் அளித்த அமைச்சர், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்குபெறும் வகையில் பாரத் நெட் டெண்டர் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிட்டார்.

Exit mobile version