தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகின் தலைசிறந்த ஐந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் இருந்து முன்னணி நிறுவனங்கள், இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திட முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு முதலீடு செய்ய வருமாறு நுகர்வோர் உற்பத்தியில் தலைசிறந்த நிறுவனங்களான கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி மற்றும் மேட்டல் இங்க் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் உற்பத்திக்கான சிறந்த சுற்றுச்சூழல் தமிழகத்தில் இருப்பதை கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version