அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைப்பதுடன், மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, சிறு, குறு-நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயவுதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.