மதுரை தொகுதியில் முதலமைச்சர் தீவிர பரப்புரை

மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் விவிஆர். ராஜ் சத்யனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

ஜெயம் தியேட்டர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், பா.ஜ.க.வை ஆதரித்து மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக இன்று, அதிமுக தலைமையிலான கூட்டணியை விமர்சிப்பதாக தெரிவித்தார். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதே போல் செல்லூரில் விவிஆர். ராஜ் சத்யனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Exit mobile version