தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைக்கும் மகத்தான பணியை மேற்கொள்வதால், பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நேரம், காலம் பாராமல் உழைக்கும் பத்திரிகையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 ஆயிரம் ரூபாயாக இருந்த பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பத்திரிக்கையாளர் குடும்ப ஓய்வூதியம் 4 ஆயிரத்து 750-ல் இருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும், பத்திரிக்கையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி, 50 லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.