ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலை பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்!

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவர் விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு, தலா 10 லட்ச ரூபாய் தமிழக அரசால் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்டது. ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிசுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Exit mobile version