மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, சூறாவளிப் பிரசாரம் செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாள் ஒன்றிற்கு சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தலையொட்டி, மார்ச் 22 ம் தேதி காலை 9 மணிக்கு, சேலம் மாவட்டம் கருமந்துரையிலுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதற்கு அடுத்ததாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். முதல் நாள் அன்றே, சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, அசராது களப்பணி ஆற்றிவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் இன்று, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.