சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம்

தென்சென்னை அதிமுக அதிமுக வேட்பாளர் டாக்டர்.ஜெயவர்தனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது நிறைவேற்ற இயலாத திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மத்தியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்றார்.தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகர மக்கள் எளிதாக பயணம் செய்ய அதிமுக அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்துவருவதை சுட்டிக்காட்டினார்.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 2 வது பாதை விரைவில் அமைக்கப்படும் என்றார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதிக்குட்பட்ட பார்த்தசாரதி கோயில் பகுதியில், பிரசாரம் மேற்கொண்ட அவர், சாதிக் பாட்ஷா மரணத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனத் தெரிவித்தார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும் சாடினார்.

Exit mobile version