இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்ஷன் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சேலம் அஸ்தம்பட்டியில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்ட மாளிகையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்புக்குரியது என்றார். 

நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தபிறகு தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுள்ளது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Exit mobile version