மாணவர் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள மோட்லாபட்டு மலைகிராமத்தில் தாட்கோ நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு பழங்குடியினர் நல தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர் விடுதியை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version