முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19- ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை முதலமைச்சர் சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் பற்றிய மனுக்களை அவர்களிடம் முதலமைச்சர் வழங்குகிறார். மத்திய அமைச்சர்களைச் சந்தித்துத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் கேட்க உள்ளார்.