திருப்பதியில் ரதசப்தி திருநாள் உற்சவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாம் தரிசனம் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சூரியனின் அவதார திருநாள் என்று கூறப்படும் ரதசப்தமி திருநாள் உற்சவம், திருப்பதி மலையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில், பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தேவஸ்தான அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு ஆசி வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, தமிழகத்தின், உளுந்தூர் பேட்டையில், ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, தேவஸ்தானத்திற்கு வழங்கிய 5 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை, முதலமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே, திருப்பதி தேவஸ்தானத்தால் மிகப்பெரிய வெங்கடாஜலபதி கோயில் கட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.