முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க சுற்றுப்பயண விவரங்கள் வெளியீடு

நியூயார்க்கில் அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரை முதலமைச்சர் சந்தித்துப் பேசுகிறார்.பின்னர் அங்கிருந்து சான் ஹொசே செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கும் தமிழ்த் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்கத் தொழில் முனைவோர் கூட்டமைப்பினரைச் சந்திக்கிறார்.

நியூயார்க்கில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை நடத்தி வரும் கேட்டர்பில்லர் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுகிறார். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஃபாக்ஸ்கான், லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில், சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

Exit mobile version