நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்படுகிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக அமைச்சர்கள் சிலரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.