ஆகஸ்ட் 6,7ல் தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம்!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில், தென் மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வரும் 6ம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். வரும் 7ம் தேதி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும் விவசாய சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Exit mobile version