சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி, காணொலி காட்சி மூலம், முதலமைச்சர் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பணிகளை துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி கீழடி பகுதியில் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், அதன் அருகில் உள்ள அகரம் மற்றும் மணலூர் ஆகிய கிராமங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கொந்தகை கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில், அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கியிருக்கிறது. அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் 30 பேருக்கும், தொல்லியல் துறை சார்பாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வு பணிகளை துவக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!!!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: Edappadi Palanisamynewsjஅகழாய்வு பணி
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023