மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? எனவும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

Exit mobile version