முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மானாமதுரை தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்குசேகரித்தார். கோவில்பட்டியில் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக திசையன்விளையில் முதலமைச்சர் பழனிசாமி வாக்குச் சேகரித்தார். அப்போது, அதிமுகவை உடைக்க தினகரன் திமுகவின் பினாமியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஒரு முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்க அதிமுக கூட்டணியினருக்கு வாக்களியுங்கள் என தோவாளையில் கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version