கொரோனா தொற்றை கண்டறிய 8 கோடி ரூபாய் மதிப்புள்ள PCR கிட் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. அதற்கு உதவும் வகையில், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றன. இந்தநிலையில், கொரோனா தொற்றை கண்டுபிடிப்பதற்காக 8 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரத்து 32 PCR கருவிகளை தமிழ்நாடு அரசுக்கு டாடா நிறுவனம் அளித்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த உதவிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் நன்றி!
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023