தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 ஆயிரத்து 472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக 931 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பாக 82 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பாக 12 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பாக 100 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதே போன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 9 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர், 2 ஆயிரத்து 472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பாக நெல்லை, ஈரோடு, திருப்பத்தூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.