திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

கடந்த 2019-ம் ஆண்டில், தமிழகத்தில், ராமநாதபுரம், விருதுநகர், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க, மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 868 புள்ளி 22 ஹெக்டேர் நிலப்பரப்பில், 150 MBBS மாணவர்கள் சேர்க்கையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி, 385 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம், புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். நிகழ்ச்சியின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர். 

Exit mobile version