தமிழகத்தின் 11-வது மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 25 ஏக்கர் பரப்பளவில் 447 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதிய மருத்துவக்கல்லூரிக்கு 60 சதவீத நிதி பங்களிப்பை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்குகின்றன.

புதிய மருத்துவக்கல்லூரி மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version