நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

நாமக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

காலை 8.30 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் முதலமைச்சர், சுவாமி தரிசனத்திற்குப் பின், வளாகத்தில் உள்ள சிறு வணிகர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், முதலைப்பட்டி மற்றும் முள்ளம்பட்டியில் பொதுமக்களையும், முக்கிய பிரமுகர்களையும் நேரில் சந்திக்கிறார். பின்னர் ராசிபுரத்திற்கு சென்று, மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

தொடர்ந்து, தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பிற்பகல் 2.15 மணியளவில் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கிறார். மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின், அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர், குமாரபாளையத்தில் மகளிர் பூத் கமிட்டி நிர்வாகிகளையும், பள்ளிப்பாளையத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

அதன் பின், கபிலர் மலை கொங்கு மண்டபம் பகுதியில், பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார். இறுதியாக குளக்கரை திண்டல் பகுதியில், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சவுராஷ்ட்ரா மண்டபத்தில் வட்டார பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.

Exit mobile version